பரமக்குடியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

பரமக்குடி, மார்ச் 2: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போகலூர் கிளையின் சார்பாக தேசிய அறிவியல் தினம் கொண்டப்பட்டது. இதில் 4 வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு போகலூர் கிளையின் தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார்.

முன்னதாக கிளைச் செயலாளர் குமரேசன் வரவேற்றார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரமக்குடி உதவி திட்ட அலுவலர் தர்மராஜ், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மருதுபாண்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். வெற்றிபெற்ற மாணவர்களை அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் காந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

போட்டியில் முத்துவயல், போகலூர், மஞ்சக்கொல்லை, பொட்டிதட்டி, மென்னந்தி, எஸ்.கொடிக்குளம் ஆகிய அரசு பள்ளி மாணவ, மாணவிகளும், தொடக்கநிலை மாணவர்கள் பங்கேற்ற போட்டிகளில் மென்னந்தி, முத்துவயல், செவ்வூர், சத்திரக்குடி, அரிய குடி, தென்னவனூர் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். இறுதியில் ஆசிரியர் அருள்பிரதாப் சிங் நன்றி கூறினார்.

The post பரமக்குடியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: