புதுக்குடி கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்: பயன்பாடு குறித்த ஆலோசனை

 

ஆண்டிமடம், மார்ச் 2: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தில் கீழ் புதுக்குடி கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நம் பயன்பாடுகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ஒழுங்குமுறை விற்பனை கூட மூலம் வேளாண்மை விலை பொருட்களை விற்பனை செய்து பயனடையலாம் என்றார்.

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ராஜேஷ் பேசுகையில், வேளாண் விற்பனை கூடத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண்மை பங்கு சந்தை பண்ணை வாயில் வர்த்தகம் செய்யும் முறைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மேற்கண்ட முறையில் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை நியாயமான விலையில் தங்களது வயல்வெளிகளிலே விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் அடையலாம் என கூறினார். முன்னதாக வரவேற்று பேசிய அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சசிகுமார் செய்திருந்தார்.

The post புதுக்குடி கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்: பயன்பாடு குறித்த ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: