நாடாளுமன்ற பாதுகாப்பு ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகர்வால் நியமனம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளும் 4 பேர் கலர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் 7 பேர் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து ஆளும் பாஜ அரசு மீது எதிர்க்கட்சியினர் கடும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணி மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு(சிஐஎஸ்எப்) மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி அனுராக் தாக்கூர் நாடாளுமன்ற பாதுகாப்புக்கான பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை மக்களவை செயலகம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டது. தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக உள்ள அனுராக் அகர்வால் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு இணைசெயலாளராக பதவி வகிப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற பாதுகாப்பு ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகர்வால் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: