சிறை கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணி வழங்ககூடாது: அனைத்து முதன்மை செயலாளர்களுக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை

டெல்லி: நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஜாதி அடிப்படையில் பணி வழங்க கூடாது என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 1350 சிறைச்சாலைகளில் 4 லட்சத்து 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிஅதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விசாரணை கைதிகளாகவும், 5400க்கும் மேற்பட்டவர்கள் தண்டனை கைதிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டில் உள்ள சிறை சாலைகளில் சாதிய மற்றும் மத அடிப்படையில் கைதிகளுக்கு பணிகள் ஒதுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனை அடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் கைதிகளுக்கு சாதிய மற்றும் மத ரீதியாக பணிகள் ஒதுக்கப்படுவது இந்திய சட்ட அமைப்பிற்கு எதிரானது என சுட்டி காட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட சிறைச்சாலைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் சாதிய அடிப்படையில் சமையல், துப்புரவு பணிகளை கைதிகளுக்கு ஒதுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறை கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணி வழங்ககூடாது: அனைத்து முதன்மை செயலாளர்களுக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: