இதுதான் அவங்களோட உண்மை முகம் ஏழைகளின் வீடுகளை இடிப்பதே பாஜவின் வேலை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: ஏழைகளின் வீடுகளை இடிப்பது, அவர்களை அவமானப்படுத்துவதே பாஜவின் உண்மையான குணம் என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் 41 சுரங்க தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இறுதியாக தடை செய்யப்பட்ட எலிதுளை சுரங்க தொழிலாளர்கள் உதவியுடன் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான வக்கீல் ஹாசன் என்ற எலிதுளை சுரங்க தொழிலாளி டெல்லி கஜூரி காஸ் பகுதியில் வசித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் கஜூரி காஸ் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தள்ளின. இதில் வக்கீல் ஹாசனின் வீடும் இடிக்கப்பட்டதால், அவர் தன் மனைவி, 2 குழந்தைகளுடன் இரவு முழுவதும் சாலையோரத்தில் தங்கி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி, “41 பேரை காப்பாற்றியபோது பாஜவின் பெரிய தலைவர்கள் எலிதுளை சுரங்க தொழிலாளி வக்கீல் ஹாசனுடன் விளம்பரத்துக்காக புகைப்படம் எடுத்து கொண்டனர். இப்போது அதே தொழிலாளியின் வீட்டை இடித்துள்ளனர்.  ஏழைகளின் வீடுகளை இடிப்பது, அவர்களை நசுக்குவது, சித்ரவதை செய்வது, அவமானப்படுத்துவது இதுதான் பாஜவின் உண்மை முகம். இந்த அநீதிக்கு மக்கள் நிச்சயம் பதிலடி தருவார்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post இதுதான் அவங்களோட உண்மை முகம் ஏழைகளின் வீடுகளை இடிப்பதே பாஜவின் வேலை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: