அரியலூர் அண்ணா சிலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

அரியலூர், பிப். 29: அரியலூர் அண்ணாசிலை அருகே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வாய்ஸ் அறக்கட்டளை, லால்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தொடக்கி வைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். வாய்ஸ் அறக்கட்டளை கலைக் குழுவினர் கலந்து கொண்டு, காற்று, நீர் மாசுபாடுகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தங்களது கலைநிகழ்ச்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை புறக்கணிப்போம், சுற்றுச்சூழல் மேம்படுத்தும் தயாரிப்புகளை வரவேற்போம் என்று முழங்கினர்.

தொடர்ந்து கலைக்குழுவினர் அரியலூர் அரசு கலைக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், ரயில்நிலையம், வார சந்தை, கடைவீதி, வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம், செந்துறை சாலை, கீழப்பழுவூர் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு வாய்ஸ் அறக்கட்டளை இயக்குநர் கிரிகோரி தலைமை வகித்தார்.

The post அரியலூர் அண்ணா சிலை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: