அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜ வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் ஆகியோர் அடங்கிய பாஜ பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் வாக்குச்சாவடி அமைக்க, வலியுறுத்தி உள்ளோம். மேலும் அரசியல் கட்சிகளின் ஊடக சந்திப்பு தொடர்பாக சீர்திருத்தங்களை செய்ய கோரியுள்ளோம்” என்றார்.

The post அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: