திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ₹4.71 லட்சம்

பண்ருட்டி, பிப். 28: கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் வருஷம் 365 நாட்களும் விசேஷம் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் சுவாமிக்கு 10 நாள் பிரம்மோற்சவம், அம்பாளுக்கு 10நாள் ஆடிப்பூரம், அப்பர் சாமிக்கு சித்திரை சதயம் 10 நாள் உற்சவம், மாதந்தோறும் பவுர்ணமி, பிரதோஷம் வாரந்தோறும் ஞாயிறன்று ஐந்து எழுத்து வேள்வி, வாரந்தோறும் திங்களன்று சோமவார வழிபாடு, வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குருவார பூஜை, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சுக்கிரவார பூஜை நடக்கும். இது மட்டுமல்லாமல் அஷ்டமிதின வழிபாடு, பஞ்சமி தினவழிபாடு, சதுர்த்தி மற்றும் கிருத்திகை தின பூஜை நடைபெறும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பக்தர்களின் காணிக்கை உண்டியல் திறப்பு நேற்று நடைப்பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கோயில் செயல் அலுவலர் தின்ஷா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்து 510ரூபாய் காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ₹4.71 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: