மாணவர்களின் கனவுகளை சிதைத்து நாட்டின் எதிர்கால எதிரியாக மோடி அரசு மாறியுள்ளது: ராகுல் தாக்கு

புதுடெல்லி: ‘எந்த தேர்வையும் நியாயமான முறையில் நடத்தத் தவறி, மாணவர்களின் கனவுகளை சிதைத்து, நாட்டின் எதிர்கால எதிரியாக மோடி அரசு மாறி உள்ளது’ என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் நேற்று கூறியிருப்பதாவது: நாட்டில் சில இடங்களில் மாணவர்கள் ஆட்சேர்ப்புக்காக ஏங்குகிறார்கள். சில இடங்களில் வினாத்தாள் கசிவால் விரக்தி அடைகிறார்கள். சில இடங்களில் பணி நியமனங்களுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது.

சில இடங்களில் இவையெல்லாம் பற்றி குரல் கொடுத்ததற்காக மாணவர்கள் தடி அடி வாங்குகிறார்கள். ஆய்வு அலுவலர், உதவி ஆய்வு அலுவலர் முதல் போலீஸ் தேர்வு வரையிலும் ரயில்வேயில் இருந்து ராணுவம் வரையிலும் ஒரு தேர்வைக் கூட நியாயமான முறையில் நடத்தத் தவறிய பாஜ அரசு இளைஞர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது.

வேலை உருவாக்கும் நிறுவனங்களை தனது நண்பர்களுக்கு விற்பதும் இளைஞர்களை ஒப்பந்த பணியாளர்களாக அமர்த்துவதும் தான் மோடியின் கொள்கை, சுரண்டல்தான் மோடியின் உத்தரவாதம். நாட்டின் எதிர்கால எதிரியாக மோடி அரசு மாறி உள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை மறைக்கும் கிரகணம் போல அவர்களிடம் இருந்து நம்பிக்கை ஒளியை பறித்துவிட்டது. இந்த குற்றத்திற்காக மோடியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post மாணவர்களின் கனவுகளை சிதைத்து நாட்டின் எதிர்கால எதிரியாக மோடி அரசு மாறியுள்ளது: ராகுல் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: