நாகப்பட்டினம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம்

நாகப்பட்டினம்,பிப்.27: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாக பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் சேட் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் செய்யது அலி நிஜாம், மாவட்டச் செயலாளர் சர்புதீன் ஷேக், மாவட்டப் பொருளாளர் காதர் ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பெரோஸ்கான் பேசினார். நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அனைத்து முன்னெடுப்புகளையும் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை நீதி மன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.

முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான 3.5 சதவீத இடஒதுக்கீடு என்பதை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். உத்தர்காண்ட் மாநிலம் பன்பூல்பூரா பகுதியில் மசூதியையும், முஸ்லிம்கள் கல்வி பயின்று வரும் மதரஸாவையும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டாக்கியதுடன், பெண்களை கேவலமாக நடத்திய உத்தர்காண்ட் பாஜகட்சி அரசை கண்டிப்பது. நாடாளுமன்றம் தேர்தலில் மின்னனு மூலம் வாக்கு செலுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, வாக்கு சீட்டு முறையையே மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post நாகப்பட்டினம் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: