மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்புவிழா

சூளகிரி: சூளகிரி அருகே பண்ணப்பள்ளி ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் கேட்டு வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து தொகுதி வளர்ச்சி நிதியில், ₹15.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, முதுகுறுக்கி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வேப்பனஹள்ளி கே.பி.முனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும், குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி ராமன், காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், சைலேஷ் கிருஷ்ணன், ஓசூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், நாராயணப்பா, நாகேஷ், அப்பையா, லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்புவிழா appeared first on Dinakaran.

Related Stories: