மோடி நாளை தமிழகம் வருகை

தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சி திருப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இதன் பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பல்லடம் அருகே மாதப்பூரில் 1,300 ஏக்கரில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி சூலூருக்கு விமானம் மூலம் வருகிறார்.

அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர உள்ளார். இதற்காக பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் 3 ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சூலூர் விமானப்படை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு மதுரை செல்லும் மோடி, அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அன்று இரவு மதுரையில் உள்ள ஓட்டலில் பங்கேற்கிறார். அங்கு ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மறுநாள் 28ம் தேதி நெல்லை, தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுத்தளத்துக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

The post மோடி நாளை தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Related Stories: