ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு கரூர் சாலையோர மரங்களுக்கு வர்ணம் பூசும் பணி குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற கருத்தரங்கம்

குளித்தலை: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா மற்றும் பெண்கள் வன்கொடுமை விசாரணை குழு சார்பாக அவள் பெயர் விவேகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கினை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திருச்சி காவேரி மகளிர் கலை கல்லூரியின் ஆங்கிலத்துறை முன்னாள் இணை பேராசிரியர் பிரேமா ஜோஷ்வா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பெண்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றியும், அறிவுப்பூர்வமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு பாதுகாப்பாக வாழ்வது பற்றியும் எடுத்துரைத்தார். கருத்தரங்கினை பெண்கள் வன்கொடுமை விசாரணை குழு உறுப்பினர்கள் பத்மபிரியா, உதவி பேராசிரியர் கணிதத்துறை, ஹில்டா தேன்மொழி, ஆங்கிலத்துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் புவனேஸ்வரி, உதவி பேராசிரியர் கணினி அறிவியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை விரிவுரையாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

The post ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு கரூர் சாலையோர மரங்களுக்கு வர்ணம் பூசும் பணி குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: