வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் ₹3.10 லட்சம் மொய் வழங்கிய பக்தர்கள் வள்ளிமலை கோயிலில் மாசி மாத பிரமோற்சவம்

பொன்னை: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரமோற்சவத்தையொட்டி நேற்று வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொய் பணமாக ₹3.10 லட்சம் வழங்கினர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமாத பிரமோற்சவ தேர் திருவிழா தொடங்கியது. அன்று முதல் உற்சவமூர்த்தி வள்ளி தெய்வான சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலை வள்ளிமலை தேரடி பகுதியில் தேர் நிலையை வந்தடைந்தது.

The post வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் ₹3.10 லட்சம் மொய் வழங்கிய பக்தர்கள் வள்ளிமலை கோயிலில் மாசி மாத பிரமோற்சவம் appeared first on Dinakaran.

Related Stories: