அதிகாரிகள் இடமாற்றம் தேர்தல் ஆணையம் கண்டிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 ஆண்டு ஒரே இடத்தில் பணியாற்றியதால் மாற்றிய அதிகாரிகளை மீண்டும் தேர்தல் விதி அடிப்படையில் அதே மாவட்டத்தில் வேறு இடத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் தேதி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து அனைந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,‘‘தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகளை, அதே நாடாளுமன்றத் தொகுதிக்குள் வேறு இடத்தில் பணியமர்த்த கூடாது.

அதனை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும். இதில் நடக்கும் நிகழ்வுகளை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு தான் இந்த இடமாற்ற கொள்கை விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேப்போன்று சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட அல்லது ஒரு இடத்தில் மூன்றாண்டுகளை நிறைவு செய்த அனைத்து அதிகாரிகளையும் கண்டிப்பாக இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு என்பது நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிகாரிகள் இடமாற்றம் தேர்தல் ஆணையம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: