போலீசார் விசாரணை கரூர் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

க.பரமத்தி: கரூர் பாராளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.25லட்சத்தில் நிறைவு செய்த பணிகளை கரூர் எம்பி ஜோதிமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள எல்லமேடு மற்றும் ராஜபுரம் நடுநிலைப்பள்ளிகள், சின்னதாராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்னிலை மற்றும் க.பரமத்தி மேல்நிலைப்பள்ளிகள், புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் போர்டு வேண்டி அப்பகுதியினர் கோரிக்கை மனுவை கடந்த மாதங்களில் மக்களை சந்தித்து குறைகள் கேட்பு நிகழ்ச்சியில் பாராளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிகாரிகளிடம் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். மனு ஏற்கப்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம்6 அரசு பள்ளிகளுக்கு ரூ.25லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் போர்டு வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

The post போலீசார் விசாரணை கரூர் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: