குளித்தலை அருகே கல்லூரி மாணவிகளின் வேளாண் கண்காட்சி

குளித்தலை, மே 26: குளித்தலை அருகே கல்லூரி மாணவிகளின் வேளாண் கண்காட்சியை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருச்சி மாவட்டம் முசிறி எம் ஐ டி வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சிக்காக ஊரக வேளாண் பணி குறித்து குளித்தலை பகுதியில் ஒரு மாத காலம் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக குளித்தலை அடுத்த தண்ணீர் பள்ளி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேளாண் பொருட்கள் கண்காட்சி நடத்தினர். அதில் வேளாண்மை சார்ந்த காளான் வளர்ப்பு, பறவை விரட்டும் முறை , சூரிய உலர்த்தி , சூரிய கதிர் மூலம் சொட்டு நீர் பாசன முறை , கயறு திரியும் இயந்திரம், அக்ரோ பாரஸ்ட் முறை , ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை முறை , நீரின் மூலம் செடி வளர்க்கும் முறை , தலைகூலம் வகைகள் , பட்டு புழு வளர்ப்பு முறை ஆகிய செயல் மாதிரிகள் இடம் பெற்றிருந்தன.

இயற்கை வழி மூலம் தயாரித்த பஞ்சகாவ்யா, மூலிகை பூச்சி விரட்டி, தெம்மோர் கரைசல் , 3ஜிகரைசல் , மீன் அமிலம் , மெட்டரைசியம் அணிசோபிலியே , சுடாமனாஸ் ப்யூலராடன்ஸ் , எலி விரட்டும் முறை, மண்புழு உரம் போன்ற பொருட்கள் கண்காட்சியில் வைக்க பட்டிருந்தது. கண்காட்சியை அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் வேளாண் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த வேளாண் பொருட்கள் கண்காட்சியை எம்.ஐ.டி வேளாண் கல்லூரி மாணவிகள் தர்ஷ்னி, காயத்ரி கோபிகா, இஷா ,ஜெகதீஸ்வரி, ஜோதி பிரியா, ஜோதிகா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post குளித்தலை அருகே கல்லூரி மாணவிகளின் வேளாண் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: