கும்பகோணத்தில் காவிரிக்கரையின் இடதுபுறம் புதிய மாற்றுச்சாலை அமைக்கப்படுமா?

 

கும்பகோணம், பிப்.23: கும்பகோணம் காவிரிக்கரையின் இடதுபுறம் புதிதாக மாற்றுச்சாலை அமைக்கப்படுமா என்று சட்டப் பேரவையில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் எழுப்பிய கேள்வி: கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கும்பகோணம் மாநகராட்சி, 06வது வட்டம், நான்கு வழிச்சாலை சந்திப்பு மிகவும் குறுகலாக உள்ளது.

அதனால், போக்குவரத்து நெரிசல் சுமார் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஆகும் அந்த பகுதி, பெரும்பாண்டி, கொரநாட்டுக்கருப்பூர், பாபுராஜபுரம் மற்றும் அசூர் போன்ற கிராமங்களில் ஆயிரக்கணக்கான மனைகள் உருவாகி அந்த பகுதி நெருக்கடியாக இருக்கிறது. மேலும் அங்கு அரசு கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், நீதிமன்றங்கள், பத்திரப்பதிவு நிலையம், திருமண கூடங்கள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் போன்ற அத்தனையும் அங்கே இருப்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அமைச்சர், காவிரிக்கரையின் இடது பக்கம் இருக்கும் மாற்றுச்சாலையாக சுமார் 900 மீட்டர் இருக்கக்கூடிய அந்த சாலையில், புதிதாக மாற்றுச்சாலை அமைத்து, அந்த பகுதி போக்குவரத்து நெரிசலை குறைப்பாரா என்பதை அறிய விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post கும்பகோணத்தில் காவிரிக்கரையின் இடதுபுறம் புதிய மாற்றுச்சாலை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: