திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம்

திருப்பரங்குன்றம், பிப். 23: திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. சேர்மன் வேட்டையன் தலைமை வகித்தார். துணை சேர்மன் இந்திரா ஜெயக்குமார், பிடிஓக்கள் செந்தில்மணி, பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் தென்பழஞ்சி சுரேஷ், ராஜேந்திரன், ஆசைத்தம்பி, மணிமாறன், நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சேர்மன் பேசுகையில், ‘திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்திற்கு ஆரம்ப காலத்தில் இலவசமாக இடம் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ சின்ன கருப்பு தேவருக்கு அலுவலக வளாகத்தில் சிலை வைத்து இந்த இடம் அவர் அன்பளிப்பாக வழங்கியது என கல்வெட்டு வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கவுன்சிலர் தென்பழஞ்சி சுரேஷ் (திமுக) பேசுகையில், ‘வடபழஞ்சியில் நியாய விலை கடை, தென்பழஞ்சியில் அங்கன்வாடி கட்டிடம், சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கலிபட்டி ஊராட்சியில் திறந்தவெளி கழிப்பிடமாக பொதுவெளியை பயன்படுத்துகிறார்கள். அப்பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது அங்கு புதிய சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்’ என்றார்.

The post திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: