விழாக்குழு அறிவிப்பு வழக்குகளை உடனே முடித்துக்கொள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அழைப்பு சில்லக்குடி அரசு பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கனிச்சாறு கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சங்கீதா தலைமை வகித்தார். உலகில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் தாய்மொழியாக, உலகின் மூத்த மொழியாக, அனைத்துலகத் தமிழர்களின் தாய்மொழியாக, உயர் தனி செம்மொழியாக விளங்குகின்ற தமிழ் மொழியின் தொன்மை சிறப்புகளையும், இலக்கண இலக்கிய வளங்கள் குறித்தும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. ஓர் இனத்தின் வாழ்வாதாரத்தையும், பண்பாட்டையும், அடையாளத்தையும் நிலைநிறுத்தி கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் சிறந்த ஆயுதம் தாய்மொழி என்பதை மாணவ-மாணவிகள் புரிந்து கொண்டனர். இதையடுத்து பள்ளி நூலகத்திற்கு “ஒளவை நூலகம்” என பெயர் சூட்டப்பட்டதோடு, ஒளவை நூலகத்திற்கு ஆவாரை நண்பர்கள் குழுவின் சார்பாக நூல்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் கிருத்திகா, காசிமணி, மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் கீதா வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

The post விழாக்குழு அறிவிப்பு வழக்குகளை உடனே முடித்துக்கொள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அழைப்பு சில்லக்குடி அரசு பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: