தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சீராக உள்ளது: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சீராக உள்ளது என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறினார்.

திமுக ஆட்சியில் வங்கிய கடன், மூலதன செலவை விட வருவாய் செலவுதான் அதிகமாக உள்ளது. கடன் வாங்குவதை தவறு என்று சொல்லவில்லை; ஆனால் அதிகமாக கடன் வாங்குவதுதான் பயமாக உள்ளது எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர்;
மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி முழுவதையும் மாநில அரசுதான் கொடுத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.74,000 கோடி வட்டி செலுத்தி வருகிறோம். வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும் தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்பான எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு;
தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை; அதற்கான நிதியை புதுமைப்பெண் திட்டத்துக்கு செலவிடுகிறோம். நாட்டின் தேவைக்கேற்ப மேம்படுத்திக் கொள்வதுதான் முதிர்ச்சி அடைந்த சமூகத்துக்கான அடையாளம். நிதி நிலைக்கு ஏற்ப மடிக்கணினி திட்டம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் ஜிஎஸ்டி நிலுவை ரூ.20,000 கோடி வரவில்லை; மாநில அரசின் நிதியில்தான் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சீராக உள்ளது: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: