தமிழக, கர்நாடக போலீசார் மேட்டூரில் கூட்டு ஆலோசனை

மேட்டூர், பிப்.21: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்ட எல்லைகளிலும் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை காவல் எல்லையிலும் அமைந்துள்ளது. இதனால் சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்ட போலீசார் கூட்டு ஆலோசனை கூட்டம் நேற்று மேட்டூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன், தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், ஈரோடு மாவட்ட ஏடிஎஸ்பி பாலமுருகன், மேட்டூர் டிஎஸ்பி மரியமுத்து, கொள்ளேகால் டி.எஸ்.பி ஜெகதீஷ், கலால் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட எல்லை வழியாகவும், மாநில எல்லை வழியாகவும் மது மற்றும் போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க இரு மாநில போலீசாரும் இணைந்து செயல்படுவது. ஆயுதங்களை பதுக்கி மிரட்டும் கும்பலை பிடிப்பது, வாக்கு பதிவின்போது, வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட ஆட்களை வாகனங்களில் ஏற்றிவந்து கள்ள ஓட்டு போடுவதை தடுப்பது, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ய பணம் கொண்டு செல்வதை தடுப்பது, சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகள் பதுங்கி இருந்தால், அந்தந்த மாநில போலீசாருக்கு தகவல் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

The post தமிழக, கர்நாடக போலீசார் மேட்டூரில் கூட்டு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: