திருப்புத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக கோட்டை கருப்பண சுவாமி கோயில் இருந்து வருகிறது. இந்த கோட்டை கருப்பண்ண சுவாமியை சுமார் 45 கிராமங்கள் உள்ளடக்கிய நாட்டார்கள், நகரத்தார்கள் பெருமக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலின் முன்பகுதியில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 20 அடி உயரமுள்ள கோட்டை சுவர்கள் இன்று வரை இரும்பு கோட்டை போல் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக முடிவு செய்யப்பட்டு கும்பாபிஷேக குழு அமைக்கப்பட்டது. இதில் திருப்பணி குழு தலைவராக வைரவன், துணைத் தலைவர்களாக லட்சுமணன், ராமசாமி, செயலாளராக அண்ணாதுரை, துணைச் செயலாளர்களாக சிவப்பிரகாசம், காசிநாதன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு கும்பாபிஷேக புணரமைப்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

The post திருப்புத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: