அணை பாதுகாப்பு நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான சிறந்த விருது பெற்ற தமிழ்நாடு நீர்வளத்துறை: அமைச்சர் பாராட்டு

சென்னை: வாட்டர் டைஜஸ்ட் அமைப்பால் நடத்தப்பட்ட 2023-2024-ஆம் ஆண்டிற்கான உலக நீர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் “அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அணை பாதுகாப்பு நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான சிறந்த விருது” தமிழ்நாடு நீர்வளத்துறைக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்-ஐ நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர். முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சென்னை மண்டல தலைமைப் பொறியாளர், கு.அசோகன், காவேரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவுத் தலைவர் இரா.சுப்பிரமணியன், இயக்கம் & பராமரிப்பு மற்றும் அணைகள் பாதுகாப்பு அமைப்பு, தலைமைப் பொறியாளர் என்.சுரேஷ். திட்ட இயக்குநர் மற்றும் சிறப்பு தலைமைப் பொறியாளர் முனைவர் இரா.இராணி மற்றும் திட்ட செயற்பொறியாளர் வ.வீரலட்சுமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இச்சாதனை புரிந்தமைக்காக தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்கள்.

The post அணை பாதுகாப்பு நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான சிறந்த விருது பெற்ற தமிழ்நாடு நீர்வளத்துறை: அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: