மூணாறு அருகே சுற்றுலா பயணிகளை கவரும் ‘மலைக்கள்ளன் குகை’

மூணாறு: மூணாறு அருகே கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் அருகே உள்ள மலைக்கள்ளன் குகை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலாத்தலமான மூணாறு அருகே உள்ள தேவிகுளம் எஸ்டேட் வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்த மலைக்கள்ளன் குகை.

பல ஆண்டுகளுக்கு முன் தங்கையா என்ற திருடன் மூணாறு பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், தமிழ்நாட்டிலிருந்து மூணாறு வழியாகச் செல்லும் வணிகக் கும்பலைக் கொள்ளையடித்துக் கொண்டு இக்குகையில் ஒளிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே இந்தக் குகை ‘மலைக்கள்ளன் குகை’ அல்லது தங்கையா குகை என்று அழைக்கப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போதும் இந்த சாலையோர குகை பாதுகாக்கப்பட்டது.

இந்த வழியே வரும் சுற்றுலா பயணிகள் மலைக்கள்ளன் குகையை கண்டு போட்டோ எடுக்காமல் செல்வதில்லை. கேப் சாலையில் இருந்து, மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் மலை குன்றுகளையும், பச்சை பசேல் என்று காணப்படும் நெல் வயல்கள் மற்றும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்கலாம்.

The post மூணாறு அருகே சுற்றுலா பயணிகளை கவரும் ‘மலைக்கள்ளன் குகை’ appeared first on Dinakaran.

Related Stories: