பாஜவுடன் சேர்ந்திருந்தால் சோரனை கைது செய்திருக்க மாட்டார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்

புதுடெல்லி: நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன் கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவிடம் தொலைபேசியில் கெஜ்ரிவால் பேசி தனது ஆதரவை தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த கல்பனா,பாஜவின் சதியை முறியடிக்க அனத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவரது அந்த பதிவை மேற்கோள்காட்டி கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், கல்பனா ஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் நாங்கள் முழுமையாக நிற்கிறோம். முழு நாடும் அவரது வலிமையையும், தைரியத்தையும் பாராட்டுகிறது. அவர் பாஜ.வுடன் கைகோர்த்து இருந்தால், தற்போது சிறையில் இருந்திருக்க மாட்டார். ஆனால், அவர் சத்திய பாதையை விட்டு விலகவில்லை, அவருக்கு வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜவுடன் சேர்ந்திருந்தால் சோரனை கைது செய்திருக்க மாட்டார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: