திரை இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக சபேஷ் தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல், கடந்த 2023 செப்டம்பர் 24ம் தேதி நடக்க இருந்தது. இதில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்தது. இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட இசைக்

கலைஞர்கள் சங்கத்தின் 2023-2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவராக 2 முறை பதவி வகித்த இசை அமைப்பாளர் தினாவை எதிர்த்து போட்டியிட்ட இசை அமைப்பாளர் சபேஷ் என்கிற எம்.சி.சபேசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக முரளி, பொருளாளராக சந் திரசேகர், துணை தலைவராக மூர்த்தி, இணை செயலா ளராக பாலேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்தல் அதிகாரியாக பாலசுப்பிரமணியன் இருந்தார்.

The post திரை இசைக்கலைஞர்கள் சங்க தலைவராக சபேஷ் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: