ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி எளாவூர் சோதனைச் சாவடியில் கிருமிநாசினி தெளிப்பு: பழவேற்காடு ஏரியில் பறவைகள் உயிரிழப்பு

சென்னை: ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு எளாவூர் ேசாதனைச் சாவடியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒரிசா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் முலமாக காய்கறிகள், ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள் ஏற்றி கொண்டு வருவதும் போவதுமாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் சில நாட்களாக ஆந்திராவிலிருந்து கார் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டை தொடர்ந்து கடத்திவரப்பட்ட வருவதும், மற்றும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி பிரியசக்தி தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இரு எல்லைகளில் தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஹவாலா பணம் கடத்தப்படுகிறது 24 மணி நேரமும் சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பழவேற்காடு ஏரி மற்றும் இருக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் ஆங்காங்கே உயிர் இழந்தது. இதை அறிந்த கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள எளாவூர் சோதனைச் சாவடிகளில் கால்நடைத்துறையினர் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். கால்நடைத்துறையினர் மேற்கண்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி கிருமிநாசினி தெளித்து அனுப்புகின்றனர். இந்தப் பணி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் சோதனைச் சாவடியில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி எளாவூர் சோதனைச் சாவடியில் கிருமிநாசினி தெளிப்பு: பழவேற்காடு ஏரியில் பறவைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: