நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாளை முதல் தொடக்கம்

 

மதுரை, பிப். 18: கலெக்டர் சங்கீதா கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால் தெரு முனை நாடகம் மற்றும் விளக்க கூட்டங்கள் வாயிலாக அவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வித்துறை உள்ளிட்டவற்றின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும். இதன்படி நாளை (பிப்.19) காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம், 11 மணி மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட், பகல் 1.30 மணி ஒத்தக்கடை பஸ்ஸ்டாண்ட், மாலை 3 மணி மேலூர் பஸ்ஸ்டாண்ட், மாலை 5 மணி கே.புதூர் பஸ்ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதேபோல் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட், 11 மணி திருப்பரங்குன்றம் பஸ்ஸ்டாண்ட், பகல் 12 மணி திருமங்கலம் பஸ்ஸ்டாண்ட், 1.30 மணி பேரையூர் பஸ்ஸ்டாண்ட், மாலை 3 மணி உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட், 5 மணிக்கு செக்கானூரணி தேவர் சிலை பகுதியில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இவற்றில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாளை முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: