₹2.5 கோடி மதிப்பில் தீயணைப்பு துறையினருக்கு 13 குடியிருப்புகள் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சேத்துப்பட்டு கிழக்கு மேடு கூட் ரோட்டில்

சேத்துப்பட்டு, பிப். 18: சேத்துப்பட்டு கிழக்கு மேடு கூட்ரோட்டில் தீயணைப்பு, மீட்பு பணித்துறை பணியாளர்களுக்கு ₹2.5 கோடி மதிப்பில் 13 குடியிருப்புகளை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவண்ணாமலை சேத்துப்பட்டு கிழக்கு மேடு கூட் ரோட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை பணியாளர்களுக்கான ₹2.5 கோடி மதிப்பிட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆரணி எம்பி விஷ்ணு பிரசாத், பேரூராட்சி தலைவர் சுதா முருகன்செவரப்பூண்டி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி ராமன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணி மாவட்ட அலுவலர் சரவணன் மாவட்ட உதவி அலுவலர் சரவணன் நிலை அலுவலர் சிவனேசன், சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சத்தியமூர்த்தி, இந்திராணி, சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் முரளிதரன், சேத்துப்பட்டு திமுக ஒன்றிய செயலாளர் எழில் மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹2.5 கோடி மதிப்பில் தீயணைப்பு துறையினருக்கு 13 குடியிருப்புகள் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சேத்துப்பட்டு கிழக்கு மேடு கூட் ரோட்டில் appeared first on Dinakaran.

Related Stories: