ரேபரேலி மக்களும், காந்தி குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னு: காங்கிரஸ் நம்பிக்கை

வாரணாசி: சோனியா காந்தி கடந்த 1997ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த சோனியா காந்தி சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு எம்பி பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 14ம் தேதி சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடப்போவது இல்லை என்று தெரிவித்த சோனியா, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் வரும் மக்களவை தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறும்போது, “ரேபரேலி தொகுதி மக்கள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்துடன் மிக ஆழமான, நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். இந்த தொகுதி காந்தி குடும்பத்திடம்தான் இருக்கும். வரும் மக்களவை தேர்தலில் காந்தி குடும்பத்தில் இருந்து யார் போட்டியிடுவார்கள் என்பதை அவர்கள் குடும்பமே முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

The post ரேபரேலி மக்களும், காந்தி குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னு: காங்கிரஸ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: