ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கட்சியின் சார்பில் பொது வேலை நிறுத்தம் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஏஐசிசி டியு மற்றும் பெண்கள் கழகம் ஆகியவை கலந்து கொண்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாயத்தை அதானி, அம்பானியிடம் ஒப்படைக்காதே. 100 நாள் வேலைத்திட்டத்தை சிதைக்காதே. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020ஐ திரும்ப பெறு என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2024ல் மோடி ஆட்சியை தோற்கடிப்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜோதிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வலத்தான், மாநில செயலாளர் ரேவதி, மாநில குழு உறுப்பினர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: