சின்னமனூர் அருகே நாளை அய்யம்பட்டி ஜல்லிகட்டு: முன்னேற்பாடுகளை தங்க தமிழ்செல்வன் ஆய்வு

 

சின்னமனூர், பிப் 17: சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் ஏழை காத்தம்மன், வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை 18ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், களத்திற்கு வரும் ஜல்லிக்கட்டு காளைகள் அங்குமிங்கும் ஓடாமல் அய்யம்பட்டி குளத்திற்கு சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், பார்வையாளர்கள் மேடை, பொதுமக்களுக்கான வசதிகளை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் எம்.எல்ஏவும், தேனி வடக்கு மாவட்டம் திமுக செயலாளருமான தங்க தமிழ்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழா கமிட்டி தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்க உள்ளன.மேலும் திருவிழாவை முன்னிட்டு குளத்திலுள்ள தண்ணீரை வெளியேற்றாமல் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு புறமும் இரும்பு கம்பி வேலி கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

The post சின்னமனூர் அருகே நாளை அய்யம்பட்டி ஜல்லிகட்டு: முன்னேற்பாடுகளை தங்க தமிழ்செல்வன் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: