பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வழிபாடு

ஓசூர், பிப்.16: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் -தளி சாலையில் உள்ள வித்யா நகர் கணபதி கோயிலில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற வேண்டி ஒவ்வொரு ஆண்டும் ஹோமம் வளர்த்து யாக பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவுன்சிலர் சென்னீரப்பா கலந்து கொண்டு 100 மாணவ, மாணவிகளுக்கு தேர்வெழுதுவதற்கான கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சுவாமி பிரசாதம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: