திருமணமான பெண் கடத்தல்

கிருஷ்ணகிரி, மே 21: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி நிர்மலா (22). கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த 18ம் தேதி நிர்மலாவின் தாய் மஞ்சுளா, தனது மகளை சமாதானப்படுத்துவதற்காக, தன்னுடன் மகராஜகடை காட்டூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்று காலை 11 மணியளவில், வீட்டில் இருந்து வெளியே சென்ற நிர்மலா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுளா, மகாராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதில், அவதானப்பட்டியை சேர்ந்த சிவா(27) என்பவர், தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான பெண் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: