புதுக்கோட்டையில் 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 

புதுக்கோட்டை, பிப்.16: புதுக்கோட்டையில் பதிக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரைப்படி புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை டவுன் திருவள்ளுவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அதில் 22 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 1100 கிலோ பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 3ம் வீதியை சேர்ந்த ஆறுமுகம் என்கின்ற முத்துக்குமார் (40) என்பவர் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆறுமுகம் என்கிற முத்துக்குமாரை கைது செய்து அவர் வைத்திருந்த அரிசியை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post புதுக்கோட்டையில் 1100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: