பார்வை மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: தமிழக அரசின் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை மாற்று திறனாளிகளுக்கான ஒரு சதவீத உள் ஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே திடீரென ஆற்காடு சாலையில் இரு திசைகளிலும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரையிலும் அதே போன்று ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி வரையிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறியதால் காவல்துறையினர் பார்வை மாற்றுத்திறனாளிகளை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

 

The post பார்வை மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: