ஒரே நாடு ஒரே தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், கொடிதேக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், கொடிதேக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு தொடங்கியது. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒன்று – ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற மிக மோசமான எதேச்சாதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு -மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு’ என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும் என கூறினார். மேலும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை திமுக, காங்கிரஸ், கொடிதேக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர் அந்த வகையில்,

முதல்வரின் தனித்தீர்மானம் வேல் முருகன் ஆதரவு

*இந்திய வரலாற்றின் சிறப்பு, மாண்பை ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்படுவதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு வேல் முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதல்வரின் தனித்தீர்மானம்- த.வா.க ஆதரவு

*தொகுதி மறுவரையறை செய்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஜனநாயக விரோதம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு த.வா.க ஆதரவு தெரிவித்தது.

முதல்வரின் தனித்தீர்மானம்- கொ.ம.தே.க. ஆதரவு

* ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, ஒரே கட்சி ஆளுவதற்காக செயல்படுத்த எடுக்கும் முயற்சி என கொ.ம.தே.க. உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அரசியல் நோக்கத்திற்காக, ஆட்சியை தக்கவைப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் அதிகாரிகளை பிரதமரே நியமிப்பார் என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?. தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் எங்கே இருக்கிறது என்று ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். வளர்ந்த பல நாடுகளில் வாக்குச்சீட்டு முறைதான் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளக் கூடாது.

முதல்வரின் தனித்தீர்மானம்- ஜவாஹிருல்லா ஆதரவு

* முதலமைச்சர் முன்மொழிந்த 2 தீர்மானங்களை ம.ம.க. வரவேற்கிறது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பின்னால் பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களின் மிகப்பெரிய கருத்தியல் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டின் கூட்டாட்சி உணர்வை அழிப்பதாக உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் தேர்தல் செலவினம் அதிகரிக்கும் என ஜவாஹிருல்லா கருது தெரிவித்தார்.

முதல்வரின் தனித்தீர்மானம்- மதிமுக ஆதரவு

*முதல்வரின் தனித்தீர்மானங்களுக்கு சட்டப்பேரவையில் மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டில் தொகுதிகளை குறைத்துவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதல்வரின் தனித்தீர்மானம் – இந்திய கம்யூ. ஆதரவு

*ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிதீர்மானத்திற்கு தளி ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்தார்.

முதல்வரின் தனித் தீர்மானத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு

*சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானங்களுக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. முதல்வரின் தனித்தீர்மானத்துக்கு ஆதரவாக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஆதரவு தெரிவித்தார். 2002-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாஜ்பாயே விட்டுவிட்டார். நிதி ஆயோக் என்ற அமைப்பில் நிதியும் இல்லை நீதியும் இல்லை.

முதலமைச்சரின் தனித் தீர்மானம் – துரைமுருகன் பேச்சு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் மீது துரைமுருகன் பேசிவருகிறார். தனித் தீர்மானம் என்பது ஜனநாயகத்தை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுக்கின்ற முயற்சி. நமது உரிமை பறிபோகாமல் இருப்பதற்காக ஒரு தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே மதம் என்று இப்படி போகும் திட்டம் ஒத்து வராது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து திமுக சார்பில் குழுவிடம் தெரிவித்துள்ளோம். நாட்டை ஒரே மதமுள்ள நாடாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், கொடிதேக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: