ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவார் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த இந்லையில், இதுவரை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிடுவார் என தெரிவிக்கபட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஜெய்ப்பூரில் இன்று சோனியா காந்தி வேட்பு மனு தக்கல் செய்கிறார். 1999-ம் ஆண்டு முதல் தற்போதுவரை மக்களவை எம்.பி.யாக சோனியா காந்தி இருந்து வருகிறார். 1999-ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் அமோதி, கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன்முதலாக சோனியா காந்தி எம்.பி. ஆனார். 5 முறை மக்களவை தேர்தலில் வென்ற சோனியா காந்தி, முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.ஆகிறார்.

The post ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடுவார் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: