ஐஐஎம் இந்தூர் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம்: அள்ளி தந்த இ-காமர்ஸ் நிறுவனம்

இந்தூர்: ஐஐஎம் இந்தூர் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருவதாக இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்(ஐஐஎம்), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்(ஐஐஎஸ்சி) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், வௌிநாட்டு நிறுவனங்கள் வளாக நேர்காணல்களை நடத்தி நிறுவனத்துக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. இந்த கேம்பஸ் இன்டர்வியூக்கள் அந்தந்த கல்வியாண்டு முடிவதற்குள்ளேயே நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் மத்தியபிரதேசம் இந்தூரில் உள்ள இந்தூரிலுள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் மகிழ்ச்சியூட்டும் வேலை வாய்ப்பு சந்தை என்ற அடிப்படையில் 150 நிறுவனங்கள் வளாக நேர்காணல்களை நடத்தின. நடப்பு ஆண்டுக்கான இறுதி வளாக நேர்காணலில் 594 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று ஒரு மாணவரை ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்துக்கு தேர்வு செய்துள்ளது.

The post ஐஐஎம் இந்தூர் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம்: அள்ளி தந்த இ-காமர்ஸ் நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: