ஜாக்டோ-ஜியோவினர் நாளை வேலைநிறுத்த போராட்டம்

 

கோவை, பிப். 14: கோவையில் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் குறித்த ஆயுத்த மாநாடு நடந்தது. இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் அம்சராஜ், மாநில துணை தலைவர் அருளானந்தம், மாவட்ட தலைவர் சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், வரும் 15ம் தேதி (நாளை) கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜக்டோ ஜியோ அமைப்பினர் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில் அதிகளவில் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடந்து வரும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் கல்வி சார்ந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோவினர் அறிவித்துள்ளனர்.

The post ஜாக்டோ-ஜியோவினர் நாளை வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: