ஸ்ரீபெரும்புதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை பாலம் கட்டும் பணி 2 மாதத்தில் தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கேள்வி நேரத்தின் போது, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை “ ஸ்ரீபெரும்புதூர் பாலம் நீண்ட நாளாக முடிக்கப்படாமல் இருக்கின்றது. அதனை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா” என்றார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: புதிய திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் ஐந்து கட்டமாக பிரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு புறவழிச்சாலை அமைத்துள்ளோம். திருவள்ளூரில் ஆரம்பித்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில், அங்கிருந்து மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமம் வரை இணைக்கும் திட்டம். இதில் ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை இணைக்கும் பகுதியில் தான் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. எங்கெல்லாம் நான்கு வழி சந்திப்புகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பாலம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் பாலம் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இரண்டொரு மாதங்களில் அந்த பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றது. கட்டாயம் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

The post ஸ்ரீபெரும்புதூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை பாலம் கட்டும் பணி 2 மாதத்தில் தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: