திண்டுக்கல்லில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயி முன்னணி விளக்க கூட்டம்

 

திண்டுக்கல், பிப். 14: திண்டுக்கல்லில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோதம், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர் நலச்சட்ட கோப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இதில் எச்.எம்.எஸ். சங்க நிர்வாகிகள் சையது, வில்லியம்ஸ், ஏ.ஐ.டி.யூ.சி. ராஜாங்கம், பாலன், சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் பிரபாகரன், தவக்குமார், ஐ என்.டி.யு.சி. சங்க நிர்வாகி உமாராணி, எம்.எல்.எப். சங்க நிர்வாகிகள் மோகன், தியாகராஜன், திமுக பகுதி கழக செயலாளர்கள் ராஜேந்திர குமார், பஜூலுல் ஹக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயி முன்னணி விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: