சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் அனுமதி: ஒன்றிய அரசு

 

 

 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் ஆவணம் வரவில்லை; நீதிமன்றம் வழங்கிய ஆவணத்தை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளோம் எனவும் கூறியுள்ளது. சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணங்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என கூறப்பட்டது.

 

The post சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் அனுமதி: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: