காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி.. 2019ம் ஆண்டே ஒப்பந்தம் முடிந்தும் ரூ.28 கோடி முறைகேடாக கட்டணம் வசூல்: 5வருடமாக ஏமாற்றப்பட்டு வரும் மக்கள்!!

செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடி மீது 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டு வட்டார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை இழுத்து மூடக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பாக செங்கல்பட்டு வட்டார காவல் நிலையத்தில் 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் வரம்பிற்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. 60 கிலோ மீட்டருக்கு இடையே ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடி இருக்கக் கூடாது மற்றும் திட்டமடி தொகை வசூல் ஆகிய முடிந்த பிறகு பரமாரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் பரனூர் சுங்கச்சாவடியில் பின்பற்றவில்லை. ஐந்து ஆண்டுகளில் விதிகளை மீறி போய் 28 கோடி ரூபாய் வசூலித்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1956 க்கு முன்பாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திட்ட மதிப்பீட்டில், சேர்க்கக்கூடாது என்ற விதியை அப்பட்டமாக மீறி செயல்பட்டு வருகிறது.

இதுபோன்று பல்வேறு வகைகளின் முறைகேடாக செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பாக பல்வேறு கட்சி நிர்வாகிகள் சுங்கச்சாவடி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று லாரி உரிமையாளர் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், கட்டண வசூல் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் செங்கல்பட்டு வட்டார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post காலாவதியான பரனூர் சுங்கச்சாவடி.. 2019ம் ஆண்டே ஒப்பந்தம் முடிந்தும் ரூ.28 கோடி முறைகேடாக கட்டணம் வசூல்: 5வருடமாக ஏமாற்றப்பட்டு வரும் மக்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: