தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக சென்னை, செங்கபட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்து. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றவுள்ளது.

இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை முதல் மழை படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக தென் மாநிலங்களில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் வெயில் தகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா, டெல்லி, சண்டிகர், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெயிலுக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பஅலை வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: