ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதாக என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
* அதிநவீன இராணுவ தரத்திலான மென்பொருளை உருவாக்குவதில் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு தருகிறதா?
* ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முடிவெடுக்கும் அமைப்புக் கருவிகள் மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளை தயாரிப்பதில், ராணுவத்துடன் இணைந்து செயல்படுகிறதா என்றும் அவ்வாறெனில் போர்க்களத்தில் இந்தக் கருவிகள் எதன் அடிப்படையில் தன் நுண்ணறிவு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் என்பது குறித்த விரிவான தகவலை தெரிவிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
* ராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையமாக செயல்படுகிறதா?
* ஒன்றிய அரசானது, உள்நாட்டுத் தொழில்நுட்பத்திற்கான தீர்வுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மேம்படுத்துகிறதா ?
* செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
* செமிகண்டக்டர் உற்பத்தி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்கள் எவை என்றும் எந்த அடிப்படையில் அந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டது .
* புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவைகளை செய்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
* செமிகண்டக்டர் துறையில் அத்தொழில் சார்ந்தவர்களுக்கும் கல்வி நிலையங்களும் திறனை வளர்த்துக் கொள்ள ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

The post ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: