கோத்தகிரியில் வளம் மீட்பு பூங்காவில் திடீர் தீ விபத்து

 

கோத்தகிரி,பிப்.13: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி மூலம் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வளம் மீட்பு பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதலே நீர்பனியின் தாக்கம் இரவு நேரங்களில் அதிகரித்தும் பகல் நேரங்களில் கடும் வெயில் காலநிலை நிலவி வருகிறது.

இதனால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதை போல் சில இடங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் இருந்து தினந்தோறும் வீடுகள் மற்றும் நகர்புறங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வளம் மீட்பு பூங்காவில் இன்று திடீரென குப்பைகள் கொட்டி வைக்கப்பட்ட பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ பற்றி எரியத்தொடங்கிய நிலையில்,அப்பகுதி முழுவதுமே கடும் புகை மூட்டமாக காணப்பட்டது.

உடனே இதனை பார்த்த பொதுமக்கள் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீயை அணைக்கும் பணியில் கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன், மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நித்தியானந்தம், பாலமுருகன், முத்துகுமார், சண்முகவேல் அடங்கிய தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டனர்.

The post கோத்தகிரியில் வளம் மீட்பு பூங்காவில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: