தொண்டமாந்துறை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

பெரம்பலூர்,பிப்.13: தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை, தண்ணீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதி செய்துதரக்கேட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவை அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தொண்டமாந்துறை கிராமத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை தரமற்ற சாலையாக உள்ளது. கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் இருந்தும் எங்களுக்கு முறையாகக் குடிநீர் விநியோகிக்கப்படுவதிவல்லை. எங்கள் பகுதி மக்களுக்கென போதுமான கழிவறை வசதியை செய்து தர வேண்டும். இந்த கோரிக்கைகள் தொடர்பாக பெரம்பலூர் கலெக்டரை சந்தித்து பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லையென்பதால், தற்போது மீண்டும் மாவட்டக் கலெக்டரைச் சந்தித்து மனு அளித்திருக்கிறோம். இதன் மீதும் நடவடிக்கை இல்லையென்றால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

The post தொண்டமாந்துறை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: