கோடை சீசனுக்கு தயாராகும் கோத்தகிரி நேரு பூங்கா

கோத்தகிரி : கோத்தகிரி நேரு பூங்காவில் ஆண்டு தோறும் கோடைவிழாவின் முதல் நிகழச்சியாக காய்கறி கண்காட்சியுடன் துவங்குவது வழக்கம்.இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் பராமரிப்பு செய்யப்பட்டு வரும் நேரு பூங்காவில் பச்சை புல்வெளிகள்,கோடை சீசனுக்காக மலர் செடி நாற்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பேரூராட்சி உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா அறிவுறுத்தலின்படி சுமார் முப்பதாயிரம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது பனிக்காலம் ஓரளவிற்கு முடிந்த நிலையில், கோடை சீசனுக்காக மலர் செடிகளின் நாற்று நடவு செய்யப்பட்டு வரும் கோடை சீசனுக்கு முன் நன்கு பராமரிக்கப்படவுள்ளது.காலை,மாலை என இரு வேளைகளிலும் தண்ணீர் பாய்ச்சும் பணி,களையெடுத்தல் பணி,அலங்கார பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பழுது பார்த்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பணிகளை கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோடை சீசனுக்கு தயாராகும் கோத்தகிரி நேரு பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: